24 மணிநேரத்தில் 195 பேர் பலி.. அதிரவைக்கும் ரிப்போர்ட்.!!

 


இந்தியா முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் இந்தியாவில் நாடுதழுவிய ஊரடங்கானது மூன்றாவது முறையாக மே மாதம் 17 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கமானது சமூக தொற்றாக மாறாமல் இருக்க ஊரடங்கு அமலபடுத்தப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது ஊரடங்கில் மாநில அரசுகள் தளர்வுகள் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு 32,134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 12,727 பேர் பூரண நலன்பெற்று இல்லங்களுக்கு திரும்பிஉளளனர். மேலும், 1,568 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 195 மரணங்கள் மற்றும் 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகளவு பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் இருக்கிறது.


From around the web