நான்காம் கட்ட பொதுமுடக்கம் குறித்து அறிவிப்பு..? தமிழக நகரங்கள் முடக்கம்..!!

 
கொரோனா பாதிப்பு காரணமாக நான்காம் கட்ட பொதுமுடக்கம் குறித்து அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் 80 சதவீத பாதிப்பு 30 நகராட்சி பகுதிகளில் இருந்தே வந்துள்ளதாக சுகாதாரத்துறை கணித்துள்ளது. இதனால் அடுத்தக்கட்ட ஊரடங்கில் குறிப்பிட்ட 30 இடங்களிலும் தளர்வுகள் குறைக்கப்படாமல் கண்காணிப்பு தொடரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த 30 இடங்களை கவனமாக கையாளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

ஆந்திரா, டெல்லி, குஜராத், மத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு,தெலங்கானா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 30 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, அரியலூர், விழுப்புரம் உள்ளிட்ட இடங்கள் கவனமாக கையாளவேண்டிய இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்காம் கட்ட ஊரடங்கில் இந்தக் குறிப்பிட்ட பகுதிகளை அதிக கவனத்துடன் கையாள வேண்டுமென சுகாதாரத்துறை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

From around the web