உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து மதுபானக்கடையை மூடவேண்டும் - ஜி கே வாசன்

 
தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று மதுபானக்கடைகளை மூட வேண்டும்

சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 

கடந்த இரண்டு நாட்களாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, நிபந்தனைகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

எனவே தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

மது கடையை திறப்பது குறித்து மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று இம்மாதம் 05 ம் தேதியே அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web