வயது முதிர்ந்தவருடன் திருமணம்..! 3 வது நாளில் பெண் எடுத்த விபரீத முடிவு..??

 


தந்தை வயது நபர் ஒருவரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொண்ட பெண் திருமணம் முடிந்த 3 நாட்களில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வடுகன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். குடிக்கு அடிமையான சாந்தகுமாருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் சாந்தகுமாரின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நல குறைவால் உயிர் இழந்துள்ளார்.

இந்நிலையில், அதே பகுதியில் வசித்துவரும் சாந்தகுமாரின் நண்பர் சங்கர்(45) என்பவர் சாந்தகுமாரின் குடும்பத்திற்கு அவ்வப்போது சிறு சிறு உதவிகள் செய்துவந்ததாக கூறப்படுகிறது. 45 வயது ஆகியும் சங்கர் திருமணம் செய்துகொள்ளத்தநிலையில் நண்பர் சந்தகுமாரின் மகள் மகாலட்சுமியை(20) திருமணம் செய்துவைக்குமாறு சாந்தகுமாரிடம் அணுகியுள்ளார்.

இதனை அடுத்து மகளை கட்டாயப்படுத்தி கடந்த மாதம் 29 ம் தேதி கோவிலில் எளிமையான முறையில் சாந்தகுமார் மகாலட்சுமியை சங்கருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணமான அடுத்த மூன்றாவது நாள் கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் மகாலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மகாலட்சுமியின் சகோதரி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தன்னைவிட 25 வயது அதிகம் உள்ள, தந்தை வயது நபர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட விரக்தியில்தான் மகாலட்சுமி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web