புதிய புயல் உருவாகியுள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை !!

 


தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. வரும் 15 ம் தேதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும்.

பின்னர் மேலும் வலுப்பெற்று வரும் 16 ஆம் தேதி புயலாக உருமாறும் வாய்ப்புள்ளது. தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய உள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளில், வரும் 15, 16,17 தேதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும். தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய உள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web