இன்று முதல் வங்கிகளில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு !!

 


கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு அரசு பொதுமக்களுக்கு சில தளர்வுகளும் செய்கிறது. நாளை முதல் ஊரடங்கில் பெரும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வங்கிகளில் பணம் எடுக்க மக்கள் பெரும் அளவில் இனி கூடுவார்கள் என்பதால், அதனை தடுக்க இந்திய வங்கிகள் சங்கம் நாளை தொடங்கி மே 11 ம் தேதி வரை புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
நாளை முதல் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் ஊரடங்கில் பெரும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சிவப்பு மண்டலத்திலும் ஓரளவு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல நிறுவனங்கள் இந்த வாரத்தில் சம்பளம் வழங்க உள்ளன.இதனால் வங்கிகளில் அதிக கூட்டம் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது.
அத்துடன் தற்போத சமூக இடைவெளியை வாடிக்கையாளர்கள் முறையாக கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதையடுத்து வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய விதிகள் கொண்டு வந்துள்ளன. அதன்படி வங்கிகளில் பணம் எடுக்க வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியை ஒதுக்க உள்ளன.


இந்த திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. வங்கி கணக்கு எண்ணின் கடைசி இலக்கம் 0 மற்றும் 1 உடையவர்கள் மே 4 ம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். அதேப்போல் கடைசி இலக்காக 2 மற்றும் 3 உள்ளவர்கள் மே 5 ம் தேதி தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம்.
4 மற்றும் 5 கடைசி இலக்கங்களை கொண்டவர்கள் மே 6 ம் தேதி பணம் எடுக்கலாம். 6 மற்றும் 7 இலக்கங்களை கொண்ட வாடிக்கையாளர்கள் மே 8 ம் தேதியும், 8 மற்றும் 9 இலக்கங்களை கடைசியாக கொண்டவர்கள் மே 11 ம் தேதியும் பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் மே 11 ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்து.அதற்கு பின் வழக்கம் போல் யார் வேண்டுமானாலும் எந்த தேதியிலும் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

From around the web