டாஸ்மாக் விவகாரம்! அரசுக்கு செக் வைத்த நீதிமன்றம் ..!!

 
தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது . பிறமாநிலங்களுக்கு சென்று அதிகமானோர் மது வாங்கி வரும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதித்தது. இதில், தடை செய்யாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. ஒருவருக்கும் மற்றொருவருக்கு 6 அடி தூரம் இடம் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்த்துள்ளது.
கூடுதல் பணியாளர்களை பணியில் ஈடுபட செய்து கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் திறக்க கூடாது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். பார்கள் திறக்க அனுமதியில்லை என்றும் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதற்க்கு தமிழக அரசியல் கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வித் கோத்தாரி, புஷ்பநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக விரிவான விசாரணை பற்றிய விளக்கம் என்று தமிழக ரசிகர்கள் அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 40 நாட்களுக்கு மேலாக குடியை மறந்து இருக்கும் மக்கள் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் பட்சத்தில் மீண்டும் மதுவுக்கு அடிமையாகும் நிலையை ஏற்படுத்தும். போதிய வருமானம் இல்லாத நிலையில் இந்த உத்தரவு குடும்பத்திற்குள் மீண்டும் பிரச்சனையை ஏற்படுத்தும்.

எனவே டாஸ்மாக் மதுபான கடையை திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது நீதிபதிகள் ஊரடங்கு உத்தரவு இருக்கும் நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதை பல மாநிலங்களில் பார்க்கமுடிகின்றது. முறையாக சமூக விலகல் பின்பற்றப்படவில்லை எனவே மதுக்கடைகளை திறப்பதற்கு பதில் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியுமா ? என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பது எதிரான வழக்கில் இன்று பிற்பகல் 2.30 மணிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

From around the web