தொண்டை கரகரப்பு – நாக்குபுண் குணமாக

 
தொண்டை கரகரப்பு – நாக்குபுண் குணமாக


தொண்டை புண், ஈறுகளில் ரத்தம் வடிதல் சரியாக:

இலந்தை தளிரை கொதிக்க வைத்து உப்பு இட்டு வாய் கொப்பளித்து வரலாம்.

குரல் கம்மல் தீர: மாந்தளிர் பொடி 1 கிராம் கஷாயம் செய்து குடிக்கலாம்.

நாக்குப்புண் குணமாக: கோடக இலையை கஷாயமாக்கி வாய் கொப்பளிக்க நாக்கு ரணம், வாய், உதடு ரணம் 1 வாரத்தில் குணமாகும்.

குரல் மாற்றத்தை சரிசெய்ய: கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு  அதக்கிக் கொள்ளவும். ஊறிய உமிழ் நீரை முழுங்கிவிடவும்.

இருமல், தொண்டை வலி குணமாக: மிளகு, திப்பிலி, சுக்கு சம அளவு பொடி 2 கிராம் தேனில் கலந்து 3 வேளை சாப்பிடலாம்.

தொண்டைபுண் குணமாக: வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் புண் ஆறும்.

தொண்டை கரகரப்பு குணமாக: சுக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடலாம்.

தொண்டைக்கட்டு, கமறல் குணமாக: மாஇலை, பச்சையிலை நெருப்பில் போட்டு புகையை வாய் திறந்து பிடிக்கவும்.

தொண்டை ரணம் தீர: மாதுளம் பூவை உலர்த்தி பட்டை காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம்.

தொண்டைகட்டு தீர: வில்வ இலை பொடி அரை கரண்டி தேனில் சாப்பிடலாம்.

தொண்டை கரகரப்பு நீங்க: வல்லாரை சாறில் ஊற வைத்து உலர்த்திய திப்பிலி பொடி செய்து சாப்பிடலாம்.

தொண்டைவலி குணமாக: விளக்கெண்ணையும் சுண்ணாம்பும் கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் தடவவும்.

வரட்டு இருமல் குணமாக: எலும்பிச்சை சாறு தேன் கலந்து பருகலாம்.

இருமல் உடனே நிற்க: முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து குடித்து வந்தால் குணமாகும்.

தொண்டைவலி குணமாக: உப்புநீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வரலாம்.

தொண்டை வீக்கம் நீங்க: கொத்தமல்லி இலை சரக்கொன்றை இலை புளி சேர்த்து காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டை வீக்கம் நீங்கும்.

From around the web