இலங்கையில் மனித வெடிகுண்டுகளாக மாறும் அநாதை சிறுவர்கள்

 
இலங்கையில் பயங்கரவாதி சஹ்ரான் ஹசீமின் கும்பல், புத்தளம் – வனாத்தவில்லு பகுதிகளில், பெற்றோரை இழந்த அநாதரவான சிறுவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்து, அவர்களை மனித வெடிகுண்டுகளாக சமூகமயப்படுத்த திட்டமிட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

இதற்காக பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரனான சாய்ந்தமருதில் தற்கொலை செய்துகொண்ட பயங்கரவாதி ரில்வான், வனாத்தவில்லு பகுதியில் உள்ள அரபுக் கல்லூரிக்கு சென்று ஆயுதம் மற்றும் கைக்குண்டு பயன்பாடு குறித்து பயிற்சி கொடுத்து, அந்நிய மதத்தவர்களை கொலை செய்ய தமக்கு போதனை செய்ததாக, அந்த அரபுக் கல்லூரி மாணவர்கள் சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிடுத்தியுள்ளதாக 4 ம் மாடி தகவல்கள் கூறியுள்ளன.

From around the web