Tuesday, December 17, 2019

மேஷ ராசி - சனிபெயர்ச்சி பலன்கள் 2020-23
மேஷ ராசி அன்பர்களே தொழிலில் தடைகள் நீங்கி சாதிப்பீர்கள்!
விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார்.
மேஷ ராசிக்காரர்களுக்கு சனிபகவான் பத்தாம் வீட்டில் அமர்கிறார். இது தொழில் ஸ்தானம். பத்தாம் இடம் கர்மஸ்தானம் என்பதால் இதை கர்மசனி என்றும் சொல்லலாம்.


இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு, தொழில், திருமணம், வேலைவாய்ப்பு எப்படி என்று பார்க்கலாம். சனிப்பெயர்ச்சி பலன்களை பொறுத்தவரை பழைய நூல்களில் 3,6.11ல் சனி வருவதை மட்டுமே நன்மை செய்யும் என சொல்லப்பட்டுள்ளது.
பொதுவாக ஜாதகத்தில் இருக்கக் கூடிய கிரகங்களின் நிலை, தற்சமயம் நடக்கக் கூடிய தசாபுக்தி மற்றும் அந்தரம் அனைத்து கிரகங்களின் கோட்சார நிலை பொறுத்து பலன்கள் மாறுபடும் என்பதால் பலன்களைப் பார்த்து பயப்பட தேவையில்லை. கடவுள் இருக்கிறார் கை விட மாட்டார் என்று நம்புவோம். பலன் தரும் பரிகாரங்களும் இருக்கின்றன.
சனி பார்வை என்ன செய்யும் சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார்.


சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இருக்கும் இடம் பத்தாம் வீடு என்றாலும் அவரது பார்வை உங்கள் ராசிக்கு 12ஆம் வீடு, 4ஆம் வீடு, 7ஆம் வீடுகளின் மீது விழுகிறது.
விரைய ஸ்தானம், சுக ஸ்தானம், களத்திர ஸ்தானங்களின் மீது சனிபகவான் பார்வை விழுவதால் அதற்கேற்ப இரண்டரை ஆண்டுகாலம் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும்.
ஜீவன சனி பத்தாம் அதிபதி பத்தில் அமர்வது பாதகமில்லை. தொழில் ஸ்தான அதிபதி அவரது வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.


உங்களுக்கு பாதகமில்லை. தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். இந்த சனிப்பெயர்ச்சியால் உடல் நலத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக முதுகு வலி ஏற்படும் கவனம் தேவை.
லாபம் அதிகரிக்கும் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு உங்களுக்கு லாபமோ லாபம்தான். காரணம் சனிப்பெயர்ச்சியோடு குருவின் சஞ்சாரமும் சாதகமாக உள்ளது. அடுத்தடுத்து நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சியும் அற்புதமாக உள்ளது. செய்யும் தொழிலில் வருமானம் கூடும். வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். பாக்கெட்டில் பணம் அதிகரிக்கும். அதே நேரத்தில் யாருக்கும் கடன் தர வேண்டாம். திரும்ப வரும் என்ற உத்தரவாதமில்லை.
தோள் மீது சுமை வேலை செய்யும் இடத்தில் அதிக பொறுப்புகள் உங்கள் தோள் மீது சுமத்தப்படும். எதையும் எளிதாக எடுத்துக்கொண்டால் பாரம் கண்ணுக்குத் தெரியாது.


சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க வேலைச்சுமையும் அதிகரிக்கத்தானே செய்யும். எனவே கவலை வேண்டாம் கணபதியை வணங்க, வேலை செய்யும் இடத்தில் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும்.
மரியாதை அதிகரிக்கும் இதுவரை உங்களைப்பற்றிய தவறான பார்வை மாறி பெயர் புகழ் அந்தஸ்து சற்று கூடும்.
உங்களுக்கென்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதைச் செய்ய ஆரம்பித்தாலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் சற்று வேகமாக முயற்சி எடுத்தீர்கள் என்றால் எண்ணிய எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
பேச்சில் கவனம் தேவை பணப்புழக்கம் சற்று தாரளமாக இருந்து வரும். தேவையான விஷயத்திற்கு தேவையான செலவுகளைச் செய்து வரவும். அப்பொழுது தான் வீண் விரையச் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் ஏற்படும். பேச்சில் சற்று கவனமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுதல் கூடாது.


புது வீடு வாகனம் வாங்க வாய்ப்பு அரசாங்க விஷயங்கள் சற்று லாபகரமாக இருந்து வரும். இதுவரை அரசாங்க விஷயத்தில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் நீங்கி சாதகமான செய்திகள் வந்து சேரும்.
எதைச் செய்ய ஆரம்பித்தாலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் கவனமாக செய்யவும். தொழில் விசயமாக அடிக்கடி வீடு மாற அல்லது ஊர் மாற வேண்டிய அவசியம் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. மனை, வீடு, வண்டி வாகனங்கள் வாங்குவதில் இருந்து வந்த இழுபறி நீங்கி அவைகளை வாங்க வேண்டிய சந்தர்ப்பம் அமையும்.
தடைகள் நீங்கும் திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கி திருமணம் இனிதே நடந்தேறும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும். புதிய நட்புகளால் எதிர்பார்த்த நன்மைகளும் அமையும்.


மாணவர்களுக்கு வெற்றி மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல கல்வி பயில வாய்ப்பு அமையும்.
புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். வேலையில் இருந்து வந்த தடைகள் கடினமான போராட்டங்களுக்குப் பின் விலகும். போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி வாய்ப்பும் நல்ல வேலை உத்தியோகமும் அமைய வாய்ப்பு ஏற்படும்.
தாய்மாமனால் நன்மை நான்காம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் நல்ல வசதியான வீடு ஒரு சிலருக்கு அமையும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மையேற்படும்.
உறவினர்களுக்கு கர்மகாரியம் செய்ய வேண்டியிருக்கும் வேலை பார்க்கும் இடத்தில் சுமை கூடினாலும் அதை எளிதில் கையாளுவீர்கள். தந்தையால் விரைய செலவு ஏற்படும். பாதிப்புகள் குறைந்து பலன்கள் அதிகரிக்க காக்கைக்கு எள் சாதம் வைக்கவும். வாலாஜாபேட்டையில் எழுந்தருளும் தங்கத்தினால் ஆன சொர்ண சனீஸ்வரரை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.


Post Navi 
Share This

0 Comments: