Friday, December 20, 2019

கும்ப ராசி - சனிபெயர்ச்சி 2020-23
கும்ப ராசிக்காரர்களுக்கு விரைய சனி - ஏழரை ஆரம்பிக்குது!
விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். இதுவரை 11ம் இடத்தில் இருந்த சனிபகவான் இனி விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனிபகவான் மகரம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு 2 வது இடம், 6வது இடம், 9 வது இடங்களைப் பார்க்கிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் அதிபதி, ராசி அதிபதியுமாவார். ஏழரையோ, அஷ்டமத்து சனியோ, கண்டச்சனியோ எதுவாக இருந்தாலும் நன்மையே செய்வார் எனவே கவலைப்படாமல் இந்த ஏழரை சனி பகவானை கடந்து விடலாம். கும்ப ராசிக்கு ஏழரை ஆரம்பிக்குதே என்று அஞ்ச வேண்டாம் இந்த ஏழரை ஆண்டு காலம் ஏற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.


கும்பம் ராசிக்காரர்களுக்கு ஜாதகப்படி கிரகங்களின் சஞ்சாரம் நல்ல நிலையில் இருந்தாலோ, தசாபுத்தி நன்றாக இருந்தாலோ எந்த பாதிப்பும் வராது. இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், குடும்பத்தில் சந்தோசம், நிம்மதி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
உங்களுக்கு நன்மைதான் யாராவது சொந்த வீட்டிற்கு கெடுதல் செய்வார்களா? அதுபோலத்தான் சனிபகவானும் உங்களுக்கு ராசி அதிபதி. கும்பராசிக்காரர்கள் சனிபகவானுக்கு செல்லப்பிள்ளை. 12வது இடம் அயன சயன ஸ்தானத்தில் சனி அமர்வதால் ஏழரை ஆரம்பிக்கிறது. அடடா ஏழரை ஆரம்பிக்கிறதே என்று பயப்பட வேண்டாம். சனிபகவான் உங்கள் ராசிக்கு அதிபதி. அவர் நல்லதே செய்வார்.
விட்டுக்கொடுங்கள் சனி பகவான் 12ல் அமர்வதால் பணம் விரையங்கள் மருத்துவ செலவாக ஏற்படும் எனவே இதை தடுக்க சுப செலவாக மாற்றுங்கள். நோயாளிகளுக்கு உதவி செய்யலாம். அவர் மகரத்தில் அமர்ந்து உங்களின் தனம், குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி.
வாயினால் வம்பு வழக்குகள் வரலாம். நாவடக்கம் தேவை.எதை பேசினாலும் பிரச்சினை வரலாம் என்பதால் வாயை மூடி பேசவும். ஈகோவை விட்டுக்கொடுங்க. குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிரச்சினைகள் வராமல் இருக்க விட்டுக்கொடுங்க. விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.


கடன் கிடைக்கும் நோயும் வரும் ராசிக்கு 6வது ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். செலவு செய்ய நோய் நொடிகள் எட்டிப்பார்க்கும்.
மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படும். எதிர்பார்த்த விரும்பிய நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். கடன்பட்டு பொருட்கள் வாங்க வேண்டிய நிலை வரும். வேலையில் ஊதிய உயர்வு கிட்டும். பதவி உயர்வு ஒரு சிலருக்கு அமையும்.
ஆலய தரிசனம் நன்மை பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தைக்கு நன்மை ஏற்படும். வேலை நிமித்தமாக ஒரு சிலர் வெளிநாடு செல்வர். பாஸ்போர்ட், விசா இவற்றில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும்.
வெளிநாட்டு பயணங்கள் நன்றாக அமையும். பலருக்கு வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் யோகம் கிடைக்கும். அடிக்கடி ஆலய தரிசனம், தெய்வ தரிசனம் செய்ய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையும்.


கல்வியில் கவனம் மாணவர்கள் படிப்பில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். அடிக்கடி மறதி மற்றும் ஞாபகசக்தி குறைந்து காணப்படும். எனவே தேவையற்ற விஷயங்களில் கவனத்தைத் திசை திருப்பாமல் படிப்பில் கண்ணும் கருத்துமாய் இருங்க. கல்விக் கடன்கள் எளிதாக கிடைக்கும். தவறு செய்தால் மட்டுமே தண்டிப்பார். தலையில் குட்டி உங்கள் தவறை சுட்டிக்காட்டுவார். வம்பு வழக்குகளில் இருந்து ஒதுங்கி இருங்கள்.
பரிகாரம் என்ன பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கலை தரும். போட்ட முதலீடு ,கொடுத்த பணம் திரும்பி வருதல் கடினம் என்பதால் நிதானித்து செயல்படவும். அகலக்கால் வைக்க வேண்டாம். சிபாரிசு யாருக்கும் செய்ய வேண்டாம்.
பணம் கொடுக்கல் வாங்கலால் உறவுகள்,நட்புகள் பகையாகும். மருத்துவ செலவுகள் புதிதாக வருகிறது. தவறுகள் அதிகமாகின்றன. அலைச்சல் அதிகரிக்கும். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு வைக்கும் என்பதால் அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளவும்.
கும்பகோணம் அருகில் திருக்கோடிக்காவலில் சனிபகவான் பால சனியாக இருக்கிறார். அவரை வணங்கினால் நன்மை நடைபெறும்.


Post Navi 
Share This

0 Comments: