Saturday, December 14, 2019

முகப்பரு குணமாக ( Acne cures )




முடிகள் அகல: வேப்பங்கொழுந்து, குப்பைமேனி இலை, விரலிமஞ்சள் அரைத்து பூசி உலரவிட்டு கழுவவும்.

தழும்புகள், முகப்பரு நீங்க: அவரை இலை சாறு தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால் குணமாகும்.

பரு: அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்துவர முகப்பருக்கள் ஒழியும்.

பரு: அம்மான் பச்சரிசி பாலை பருக்கள் மீது தடவி வர மறையும்.

பருக்கள் நீங்க: வெள்ளைப்பூண்டும், துத்தி இலையும் நறுக்கி நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி தினசரி பரு மீது தடவ நீங்கும்.

பரு மறைய: கடற்சங்கை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவிவர இரண்டு நாட்களில் பருக்கள் மறையும்.

முகத்தில் வரும் சிறு கட்டிகள் குணமாக: சந்தனம் முகத்தில அடிக்கடி பூசி காயவிட்டு முகம் கழுவ குணமாகும்.

முகப்பரு குணமாக: சிறுதேள் கொடுக்கு இலையை அரைத்துப் பற்றுப் போடலாம்.

முகப்பரு, படர்தாமரை நீங்க: சந்தனக்கட்டையை எலும்பிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவலாம்.

பரு மறைய: மரப்பாச்சிலை நீர்விட்டு கல்லில் மைய அரைத்து பரு மீது தடவிவர பருக்கள் மறையும்.

பருக்கள் குணமாக: ஜாதிக்காய், சந்தனம், மிளகு சேர்த்து அரைத்து தடவ குணமாகும்.

முகப்பரு நீங்க: கானாவாழை இலையை கசக்கி பூச விரைவில் நீங்கும்.


Post Navi 
Share This

0 Comments: