Thursday, December 19, 2019

மூட்டுவலி குணமாக




மூட்டுவலி, சதைவீக்கம், நரம்பு பிசகு: நொச்சி சாற்றை பூசி குணம் பெறலாம்.

மூட்டுவலி தீர: நொச்சி இலை சாறு, மிளகுத் தூள், நெய் சேர்த்து சாப்பிடலாம்.

மூட்டுவலி, இடுப்பு வீக்கம் தீர: நொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

வாதவலி, மூட்டுவலி தீர: ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம்.

மூட்டுவீக்கம் குறைய: சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து பூசி வரலாம்.

மூட்டுவலி குணமாக: அத்திபாலை பற்றுப்போட மூட்டுவலி குணமாகும்.

மூட்டு, இடுப்பு, வாதவலிக்கு ஒத்தடம்: முருங்கை இலை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

மூட்டுவலி தீர: தழுதாழை இலை வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

இடுப்பு மற்றும் மூட்டுவலி குணமாக: கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.

வாத மூட்டுவலி குணமாக: வெங்காய சாறை கடுகு எண்ணையில் கலந்து வலி உள்ள இடத்தில் தடவிவர குணமாகும்.

மூட்டுவலி தீர: வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை பொடி 2 கிராம் சாப்பிட்டுவர மூட்டுவலி தீரும்.

மூட்டுவலி குணமாக: வேப்பஎண்ணை, விளக்கெண்ணை, தேங்காய் எண்ணை கலந்து சூடாக்கி தேய்க்க குணமாகும்.

இடுப்பு மற்றும் மூட்டுவலி குணமாக: வாதநாரயணன் இலையை பொடி செய்து காலை, மாலை கால் கரண்டி சாப்பிட்டுவர குணமாகும்.

மூட்டுவலி: வாதநாரயணன், தழுதாழை, நொச்சி, வேலிபருத்த கரிய மோளம் பொடி புளியில் கரைத்து தடவ குணமாகும்.


Post Navi 
Share This

0 Comments: