Thursday, December 12, 2019

மஞ்சள் காமாலை குணமாக


காமாலை கல்லீரல் குறைபாடு நீங்க: பாகற்காய் வற்றல் வறுத்து உண்ணலாம்.





காமாலை தீர: மூக்கிரபட்டை வேர், அருகம்புல், கீழாநெல்லி, மிளகு கஷாயம் 2 வேளை சாப்பிட்டு வரலாம்.





காமாலை, பாண்டு தீர: நன்னாரி வேர்பொடி தேனில் கலந்து சாப்பிடலாம்.





மஞ்சள் காமாலை குணமாக: தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்றுபோட்டு மோரில் கலந்து 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.







மஞ்சள் காமாலை நீங்க: வேப்பம் கொழுந்து இலையை நிழலில் உலர்த்தி அரை பங்கு உப்பு, ஓமம் வறுத்து பொடி செய்து சேர்த்து சாப்பிடுவரக் குணமாகும்.





மஞ்சள் காமாலை குணமாக: கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை சமஅளவு கலந்து பத்து நாட்கள் சாப்பிட குணமாகும்.





மஞ்சள் காமாலை சரியாக: மலச்சிக்கல் இல்லாமல் வைத்துக்கொண்டு காரட், பீட்ரூட், அவரைக்காய், வாழைத்தண்டு தினமும் ஏதாவது சாப்பிட்டு வந்தால் நோய் அணுகாது.





மஞ்சள் காமாலை நீங்க: வாழைப்பழ தோல் மீது சுண்ணாம்பு தடவி இரவு முழுவதும் பனியில் வைத்து காலையில் சாப்பிடலாம்.







மஞ்சள் காமாலை சரியாக: பொன்னாரை இலையுடன் கீழாநெல்லி சம அளவு சேர்த்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டு வரலாம்.





மஞ்சள் காமாலை குணமாக: அவுரி இலையை அரைத்து வெள்ளாட்டு பாலில் 3 நாட்கள் சாப்பிடலாம்.





மஞ்சள் காமாலை சரியாக: கையாந்தரை, தும்பை, அம்மான் பச்சரிசி, மிளகு சேர்த்து உண்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.





மஞ்சள் காமாலை: வாழைத்தண்டு பொடி தேன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.



Post Navi 
Share This

0 Comments: