Sunday, December 8, 2019

கண் சமந்தமான நோய்களுக்கு


கண்கள் ஒளி: நேத்திரமூலி,அதிமதுரம் தூள் செய்து உட்கொண்டு வந்தால் ஒளி பெறும்.





கண்கள் எரிச்சல்: அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து பொடி செய்து தேன் கலந்து சுடுநீரில் சாப்பிட குணமாகும்.





நீர் கோளை: உடற்சூட்டினால் வரும். இதற்கு கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து அரைத்து, சிறு உருண்டை சாப்பிட பிரச்சனை தீரும்.





கண்நோய்: குங்குமப்பூவை தாய்பாலில் குழைத்து கண் மீது பற்று போட குணமாகும்.





கண்வலி, கண் சிவப்பு, அரிப்பு தீர: விலவம் தளிரை வதக்கி இளம் சூட்டுடன் கண்களின் மீது ஒத்தடம் கொடுக்கலாம்.





கண் ஒளி: தூதுவளை காய் ஊறுகாய் செய்து சாப்பிட குணமாகும்.





கண்கள் குளிர்ச்சி: அரைக்கீரை வாரம் 2 முறை உணவில் சேர்த்து வரலாம்.





கண்வலி, கண் சிவப்பு: புளியம்பூவை அரைத்து கண்ணைச் சுற்றி பற்றிட குணமாகும்.





கண்பார்வை தெளிவு: பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகி வரலாம்.





கண்நோய் தீர: முருங்கை கீரை சாப்பிட்டு வரலாம்.





கண்சூடு: நெல்லிக்காய் சாறு பிழிந்து ஒவ்வொரு ஸ்பூன் இருவேளை குழந்தைகளுக்கு கொடுத்துவர குணமாகும்.





 கண்ணில் சதை வளருவதை தடுக்க: பிரமதண்டு இலைச்சாறு பால் 1 துளி கண்ணில் விடுவது பலன் தரும்.





கண்களுக்கு குளிர்ச்சி தர: வெண்டைக்காய் உணவுடன் அடிக்கடி சேர்த்து வரலாம். மூளை பலமடையும்.





கண்கள் ஒளி பெருக: சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து கொள்ளலாம்.





கண்வலி வராமல் தடுக்க: எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும்.





கண்புரை குணமாக: கீழநெல்லி இலை, வேரை மட்டும் நீக்கி தண்டை மட்டும் எடுத்து விளக்கெண்ணெயில் கலந்து கண்ணில் விட்டு வரலாம்.





மாலைக்கண் நோய் குணமாக: மூக்கிரட்டை இலை, பொன்னாங்கன்னி இலை, கீழநெல்லி பொடி சம அளவு கலந்து சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.





கண் எரிச்சல் தீர: கோவை இலை கஷாயம் குடித்து வரலாம்.





பார்வை மங்கல் குணமாக: மூக்கிரட்டை வேர் பொடி காலை, மாலை 1 சிட்டிகை தேனில் சாப்பிட்டு வரலாம்.





கண் எரிச்சல் தீர: நந்தியவட்டை பூவால் ஒத்தடம் குடுக்கலாம்.



Post Navi 
Share This

0 Comments: