Thursday, December 5, 2019

பல்வலி, பல் கூச்சம், பல் அரணி சரியாக


பல் உறுதியாக: மாவிலையை பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால் உறுதி பெறும்.





பல் வலி நிவாரணம் பெற: கோவைப் பழம் சாப்பிடலாம்.





பல் உறுதியாக: நெல்லிக்காயை பற்களினால் நன்கு மென்று தின்றுவர பற்கள் உறுதி பெறும்.





பல் நோய்: பூந்திக் கொட்டை உப்பு சேர்த்து வறுத்து பல்பொடியில் சேர்த்து பல் தேய்க்க பல்நோய் வராது.





பல் ஆடுதல்: மகிழ மரக்காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப சரியாகி உறுதிபடும்.





பல்வலி, ஈறுவலி குணமாக: கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி நெருப்பிட்டு வாயில் புகை இழுக்கலாம்.





ஈறு பலமடைய: மாசிக்காயை தூளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம்.





பல்வலி நீங்க: ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு கொள்ளலாம்.





பல்லரணை: கற்கண்டு அடிக்கடி பயன்படுத்தி வர குணமாகும்.





பற்கள், எலும்புகள் உறுதியாக: ஒரு நாள் விட்டு ஒரு நாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம் பழம் சாப்பிட்டு வரலாம்.





பல்வலி: மகிழ மரத்தின் பட்டையை பொடியாக்கி பல் துலக்கினால் கடுமையான வலி கூட குறையும்.





பல்கூச்சம், ஈறு வீக்கம் தீர: புளியங்கொட்டையை தோல், கருவேலம் பட்டை, தூள் உப்பு கலந்து பல் துலக்கலாம்.





பல்வலி: நந்தியாவட்டை வேரை மென்று துப்பலாம்.



Post Navi 
Share This

0 Comments: