Tuesday, December 31, 2019

கால் ஆணி – யானைக்கால் வியாதி குணமாக



யானைக்கால் வியாதி: வல்லாரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வரலாம்.

கண்ணாடி குத்திய காயம்: கண்ணாடி குத்தி எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டும் காலில் இருந்தால் ஓமத்தை வெல்லத்துடன் அரைத்து கட்ட எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டாக இருந்தாலும் வெளியேறிவிடும்.

கால் ஆணி போக: மருதாணி, மஞ்சள் சேர்த்து அரைத்து இரவு கால் ஆணி மீது கட்டலாம்.

கால் ஆணி குணமாக: வெள்ளை அரகு அரைத்து வைத்து கட்டவும்.

கால் ஆணி வலி தீர: மஞ்சள், வசம்பு சிறிதளவு கற்பூரம், மருதோன்றி இலை அரைத்து கட்டி வரலாம்.

கால் ஆணி: சித்திரப்பாலாடை கீரையின் பாலை தடவலாம்.

குதிகாலில் வலி: தவிடையும் உப்பையும் வறுத்து ஒத்த்டம் இடலாம்.

யானைக்கால் வியாதி: வல்லாரை இலை பொடி காலை மாலை நெய்யில் சாப்பிட்டு வரலாம்.

யானைக்கால் வீக்கம்: காக்கிரட்டான் விதை தூள், இந்துப்பு, சுக்கு தூள் கலந்து 3 கிராம் சாப்பிட்டு வர வீக்கம் குறையும்.

முள் வெளியேற: எலிக்காதிலை இலையை அரைத்து முள் குத்திய இடத்தில் வைத்து கட்ட முள் ஒடிந்து உள்ளே வெளியேறிவிடும்.

முள் வெளியேற: கள்ளிப்பால் அல்லது எருக்கன் பால் முள் குத்திய இடத்தில் ஓரிரு சொட்டு தடவ முள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் வெளியேறிவிடும்.

முள் வெளியேற: முள் குத்திய இடத்தில் அம்மான் பச்சரிசிப் பாலை தடவ முள் வெளியேறிவிடும்.


Post Navi 
Share This

0 Comments: