Saturday, December 7, 2019

வயிற்றுப்பூச்சிகள் நீங்குவதற்கு


திமிர்பூச்சி தீர: சுண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வரவும்.





குடல் பூச்சி: மாங்கொட்டை பருப்பை காய வைத்து பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனில் கடைந்து உணவுடன் சாப்பிட்டு வரலாம்.





குடல் புழுக்கள் அழிய: மாதுளம் பழம் படுக்கைக்குச் செல்லும் முன் சாப்பிட புழுக்கள் அழியும்.





வயிற்று பூச்சி அழிய: வெங்காய பூவை அடிக்கடி உணவுடன் பயன்படுத்தி வரலாம்.





வயிற்று பூச்சிகள் நீங்க: பப்பாளி பாலை விளக்கெண்ணையில் குடிக்க நீங்கும்.





வயிற்றுப்பூச்சி அழிய: வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் பருகினால் நூல் புழு வயிற்று உபாதை உண்டு பண்ணும் புழுக்கள் மடிந்து வெளியேறும்.





வயிற்றுப் பூச்சிகள் ஒழிய: அன்னாசிபழம் தினம் சாப்பிடலாம்.





வயிற்று பூச்சி ஒழிய: இலவங்கப் பட்டை வாரத்தில் இருமுறை பயன்படுத்தி வரலாம். தாது விருத்தியாகும்.





வயிற்று புழுக்கள் வெளியேற:  எருக்க இலைச்சாறு 3 துளியை 10 துளி தேன் கலந்து கொடுக்கலாம். (குழந்தைகளுக்கு கூடாது)





வயிற்றில் உள்ள பூச்சிகள் ஒழிய: மாதுளம் செடியின் வேரைச் சுத்தம் செய்து நீர்விட்டு காய்ச்சி அந்த நீரை பருகலாம்.





நுண் புழுக்கள் அழிய: மணலிக்கீரையை உண்டு வரலாம்.





நாக்கு பூச்சி நீங்க: குப்பைமேனி வேர் பொடி கஷாயம் செய்து குடிக்கலாம்.





வயிற்றுப் பூச்சிகள் வெளியேற: வாய்விளங்காப் பொடியை வேளைக்கு 1 தேக்கரண்டி தேனில் குழைத்து 3 வேளை கொடுத்து மறுநாள் ஆலிவ் ஆயில் குடிக்க குணமாகும்.





வயிற்றுப் பூச்சிகள் ஒழிய: பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன்கலந்து அருந்திவர பூச்சி, புழுக்கள் ஒழியும்.





குடற்பூச்சிகள் அகல: கல்யாண முருங்கை இலைசாறு 10 துளி வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.





வயிற்றுப் பூச்சிகள் வெளியேற: வசம்பை சுட்டு தேன் கலந்து குழப்பி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.



Post Navi 
Share This

0 Comments: