Wednesday, December 11, 2019

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் – சென்னிமலை
மூலவர்                   : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி)

புராண பெயர்               : புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி.

ஊர்                       : சென்னிமலை

மாவட்டம்                 : ஈரோடு

மாநிலம்                   : தமிழ்நாடு

தல சிறப்பு:

·         கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம்.

·         பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய இடம்

·         அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம்.

·         இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாது.

·         12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தம்.

·         முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம்.

·         இங்கு குகை வழியாக பழனியை அடையலாம்.

·         தைப்பூசத் தேர் திருவிழா இங்கு முக்கிய திருவிழாவாகும்.

·         பேய், பிசாசு பிடித்தவர்கள் துரத்திவிடும்.

·         சிரசுப் பூ உத்திரவு கேட்டல்

·         இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழி காட்டிய தலம். 

கோவில் வரலாறு:

    தமிழ்நாட்டின் கொங்கு மலைப்பகுதியிலே, ஈரோடு மாவட்டத்திலே, ஈரோடு பெருநகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலே,சென்னிமலை என்ற அருள்மிகு சென்னிமலை ஆண்டவர் திருத்தலம் அமைந்துள்ளது.

சென்னிமலையின் விளக்கம்:

   சென்னிமலை (சிரகிரி - சிரம் சென்னி, கிரி-மலை) இதன் உயரம் 1740 அடி. ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் நடந்தபோது, ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் இது என்று கூறுகின்றனர்.

   முருகன் நடுநாயகமாக, மூர்த்தியாக, செவ்வாய் கிரகமாக அமைந்து மூலவரைச் சுற்றி எட்டு நவகிரகங்கள் உள்ளன. மூலவரை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலன் உண்டு.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நொய்யல் ஆற்றின் கரையில் 'கொடுமணல்' என்ற கிராமம் சீரும், சிறப்புடனும் இருந்து வந்தது. ஒரு
பெரிய பண்ணையாரின் காரம் பசு ஒன்று அனுதினமும் ஓரிடத்தில் சென்று தனது மடிப்பால் முழுவதையும் அந்த இடத்தில்
சொரிந்து வந்தது. பண்ணையார் அந்த இடத்தை தோண்டிப்பார்த்த பொழுது, ஒரு கற்சிலை விக்ரஹம் தென்பட்டது. அதை எடுத்து
ஆனந்தப்பட்ட பண்ணையார் அதன் முகப்பொலிவில் ஈடுபட்டு மெய் மறந்தார். பின் விக்ரஹத்தை ஆராய்ந்தபொழுது இடுப்புவரை
அந்த விக்ரஹம் நல்ல வேலைப்பாடுடனும், முகம் அதி அற்புதமாகவும் இருந்ததாகவும், இடுப்புக்குக்கீழ், கரடு முரடாக ஒரு
வடிவமின்றி இருந்ததால் அதை வடிவமைக்க அந்த விக்ரஹத்தின் மீது சிற்பி

உளியால் அடித்தபொழுது ரத்தம் பீரிட்டு வந்தது
கண்டு, பயந்து வேலை அப்படியே நிறுத்தப்பட்டது என்றும் வரலாறு கூறுகிறது.

      பழனியம்பதிக்கு முன் தோன்றிய சென்னிமலை சிவபெருமான் திருமணத்தின்போது, தென்கோடி மக்கள் அனைவரும், சிவ-பார்வதி திருமணக்கோலம் காண, வடகோடியில் குவிந்தனர். அப்போது வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. இதை சமன் செய்ய, அகத்தியரை தென்கோடிக்கு, சிவபெருமான் செல்ல பணித்தார். சிவபார்வதியின் திருமணக்கோலத்தை தான் காண முடியாதா என, அகத்தியர் வருந்தினார். உனக்கு, அங்கேயே காட்சியளிப்பதாக, அருளினார். தென்திசை நோக்கி வந்த அகத்தியரை, சூரபத்மன் போன்ற அசுரர்களின் தலைவனான இடும்பாசுரன் எதிர்கொண்டு, அவரை வணங்கி, தன்னை சிஷ்யனாக ஏற்க வேண்டினார். அகத்தியரும், சிஷ்யனாக ஏற்றனார். தென்திசை நோக்கிய அவசர பயணத்தால், தன் சிவபூஜை எடுத்து வரும்படி, இடும்பனை, அகத்தியர் பணித்தார். வடதிசை சென்ற இடும்பனுக்கு, அம்மலையில், சிவபூஜை எங்குள்ளது எனத்தெரியாமல், சிவகிரி, சத்யகிரி என இரு மலைகளை, காவடியாக எடுத்து, சென்னிமலை வந்தார். அப்போது, சென்னிமலை துவாபர யுகத்தில், புஷ்பகிரியாக இருந்த மாட்டு வண்டி மலையேறிய அதிசயம்.


Post Navi 
Share This

0 Comments: