Tuesday, December 24, 2019

மன்னன் தலையை வெட்ட சொன்ன தெனாலிராமன்


அன்று மாலை அரசர் சற்று ஓய்வாக இருந்தார். வாருங்களேன்! ஆற்றங்கரைப்பக்கம்  சென்று வருவோம்!’ என்று அழைத்தான் தெனாலிராமன்.

 அவரும் சரியென்று புறப்பட்டு விட்டார். வழியில் அநேக இயற்கை கட்சிகள் தென்பட்டன. ‘அரண்மனையிலேயே அடைந்துக் கிடக்கும் நீங்கள் இவற்றையெல்லாம் பார்த்து  எப்பொழுது ரசிப்பது ? அதற்காகத்தான் இப்படி அழைத்து வந்தேன்!” என்றான்.

 “ஒரு நாட்டின் அரசன் என்றால் எத்தனையோ பொறுப்புகள்! அவற்றைக் கவனிக்கவே நேரம் போதுமானதாக இல்லையே!’’இவ்வண்ணமாக பேச்சு சுவாரஸ்யத்தில் கீழே கவனிக்காமல் ஆற்றங்கரையில் இருந்த மலத்தை மிதித்துவிட்டான் தெனாலிராமன்.

உடனே அந்தக் காலைத் தூக்கிக் கொண்டு நொண்டியடித்தான் தெனாலிராமன் அரசர் விழுந்து விழுந்து சிரித்தார். தத்தித் தத்தி ஓடி ஆற்றில் இறங்கி நன்றாய்க் காலைக் கழுவிக் கொண்டு வந்தான் தெனாலிராமன்.

‘அப்பனே இதலாம் சுத்தமாகாது!’ என்று நையாண்டி பண்ணினார் அரசர்.

மீண்டும் நன்றாய் மண்ணைப் போட்டுத் தேய்த்துக் காலைக் கழுவினான்.‘நீ என்னதான் தேய்த்தாலும் சரி. அது சுத்தமாகாது. நம் கண்களுக்குத் தெரியத அளவில் ஒட்டிக் கொண்டுதானிருக்கும் என்று அடித்துப் பேசினார்.

“பிறகு நீங்கள் என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்?” என்று அலுத்துக் கொண்டான் தெனாலிராமன்.

“செய்வதென்ன! அந்தக் காலை அப்படியே வெட்டி எடுத்துவிட வேண்டியதான்” என்று நிர்தாட்சண்யமாய் சொன்னார் அரசர்.“என்ன! என்ன! என் காலை வெட்டுவதா?” என்று துள்ளிக் குதித்தான் அவன்.அது சரி! நீங்கள் அதிகாலையில் வெளிவாசலுக்கு போய்வந்து அலம்பிக் கொண்டு வருகிறீர்களே! அது மாத்திரம் சுத்தமாகிவிடுகிறதா?” என்று ரோஷமாய் கேட்டான்.

“அது நம்முடைய சொந்த அழுக்கு. இது அப்படி இல்லையே! என்று அதற்கும் மறுப்பு சொன்னார் மன்னர்.

“சரி.- இன்னொரு தடவை வேண்டுமானாலும் கழுவிக் கொண்டு வருகிறேன்” என்று ஆற்றில் கால்களை முழுக்கி நன்கு தேய்த்துக் கழுவிக் கொண்டு வந்தான்.

சரி சரி இனிமேல் இந்தக் காலை வைத்துக் கொண்டு அரண்மனை தர்பார் மண்டபத்தினுள் நுழையாதே. தெரியுமா? அங்கு விரிந்திருக்கும் இரத்தின ஜமக்காளம் எல்லாம் உன்னால் மாசு அடைந்துவிடும்” என்று எச்சரித்தார் அரசர்.“சரிதான். இப்பொழுது அப்படித்தான் சொல்வீர்கள். அதன் பிறகு நீங்களே உங்கள் வார்த்தையை மாற்றிக் கொள்ளப்போகிறீர்கள் பாருங்கள்”.

“அப்படியெல்லாம் நம்மிடம் நடக்காது அப்பனே!” என்று மார் தட்டினார் மன்னர். அரசனே இப்படி சொல்லிவிட்ட பிறகு என்ன செய்வது!

அதன் பிறகு தெனாலிராமன் அரண்மனைப் பக்கம் போகவில்லை.

ஆனால் ஆழ்ந்த யோசனையிலாழலானான். அரசனை எப்படியாகிலும் இங்கு வரவழைக்க வேன்டும்! என்ன செய்வது? என்று யோசித்தான்.’ சரி இப்படிச் செய்து பார்க்கலாம்?’ என்று தீர்மானித்து காரியத்தில் இறங்கினான்.

தன் வீட்டுக் கொல்லையில் அநாவசியமாக விலைந்திருந்த செடிகளையெல்லாம் பிடுங்கிப் போட்டு விட்டு, சமப்படுத்தினான். நேர்த்தியான பட்டு ரோஜா செடிகளைப் பயிராக்குவதில் தீவிரமாக முனைந்தான். இதற்காக எங்கெங்கிருந்தோ ரோஜா செடிகளை தருவித்துவிட்டான். சீக்கிரத்தில் அவை ஜாம் ஜாம் என்று துளிர்த்து அழகான புஷ்பங்கயும் புஷ்பித்தான்.பக்கத்திலேயே சற்று ஆழமான பள்ளம் வெட்டி வைத்தான். அதில் நிறைய குப்பை கூளம், மலம், சாணம் முதலியவற்றைச் சேகரித்துக் கொட்டி நிரப்பினான்.

பிறகு ரோஜா செடிகளைப் பிடுங்கி நட்டான். சுற்றிலும் லேசாய் மணலைத் தூவி வைத்தான்.

மன்னருக்கு ரோஜா செடிகளின் மேல் ரொம்பப்பிரியம் என்று தெரிந்துதான் இந்த ஏற்பாடுகளையேல்லாம் செய்தான்.

பிறகு  அங்கு பூத்திருக்கும் அழகான வண்ண  ரோஜா மலர்களை வந்து பார்க்கும்படி மன்னனுக்கு ஆள் விட்டனுப்பினான்.

அப்பொழுது அரசர் எங்கேயோ வெளியூர் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். இந்தச் செய்தி கிடைத்ததும் வெளியூர் செல்லுவதை ஒத்திப்போட்டு விட்டு தெனாலிராமன் வீட்டுக்குப் புறப்பட்டு விட்டார். குதிரையையத் தோட்டத்துக்கு வெளியே கட்டி விட்டு, அவன் தோட்டத்தினுள் நுழைந்தார் மன்னர். அங்கு மன்னரை வரவேற்க தெனாலிராமன் தயாராய் காத்திருந்தான்.

“ஆகா! எத்தனை நேர்த்தியான புஷ்பங்கள், இச்செடிகளையெல்லாம் எங்கிருந்து  சேகரித்தாய்? நேர்த்தியாக பயிர் செய்திருக்கிறாய்!” என்று சொல்லிக் கொண்டே அச்செடிகளின் அருகில் சென்ற அரசர் வழியிலேயே அந்தப் பள்ளத்தில் தொபுக்கென்று முழ்கி விட்டார்.

அரசருடைய உடல் கழுத்துவரை உள்ளே பதிந்து விட்டது. எழுந்திருக்க முயற்சிக்க அவரது உடல் உள்ளே சென்றதேயொழிய, அவரால் வெளியே வரவே முடியவில்லை.

“இருங்கோ இருங்கோ!” என்று உள்ளே ஓடிச் சென்றான் தெனாலிராமன்.“சரிதான், உதவிக்கு ஆள் அழைத்து வரப்போகிறான் போலிருக்கு!” என்று எண்ணிக் கொண்டு  அந்த அசிங்கத்தை மூச்சைப்பிடித்துக் கொண்டு தாங்கிக் கொண்டார் அரசர்.

ஆனால் தெனாலிராமன் கையில் ஒரு கத்தியை எடுத்துக் கொண்டல்லவா திரும்பினான்.

“சற்று இருங்கோ!” என்று கத்தியை அங்கிருந்த மரத்தில் கூர்படுத்திக் கொண்டே “அசிங்கமான பாகத்தைச் சிதைக்கக் கழுத்தண்டை வெட்டினால் போதுமல்லவா!” என்றான் தெனாலிராமன்.

“என்ன சொல்கிறாய் நீ? என் தலையை வெட்டுகிறதா?” என்று ஆவேசமாய்க் கத்தினார் மன்னர்.

ஆமாம், எனக்கு ஒரு நியாயம்! உங்களுக்கு ஒரு நியாயமா?”

அசிங்கமான பாகத்தை சிதைக்கக் கழுத்தண்டை வெட்டினால் போதுமல்லவா!” என்றான் தெனாலிராமன்.

“ஏன் எல்லோருக்கும் ஒரே நியாயாம்தான்!”“முன்பு ஆற்றங்கரையில் மலத்தை நான் மிதித்து விட்டதற்கு என் காலையே வெட்டி எறியச் சொன்னீர்களே!” என்று இடித்துக்கட்டினான் தெனாலிராமன்.

“அட போக்கிரி! அதற்க்குத்தான் இப்படியா! நான் வேண்டுமென்றே விளையாட்டுக்குச் சொன்னேனடா! நீ அரண்மனையே சோபையிழந்து  கிடந்ததுடா! உன் சிரிப்பு அலைகள் அங்கு இத்தனை நாளும் வீசாமல், கலகலௌபே இல்லை!

‘இதோ என் வார்தைகளை மாற்றிக் கொள்கிறேன். யாராவது இந்த்ப் பக்கம் வருவதற்குள் என்னைத் தூக்கிவிடுடா!” என்று கத்தினார் மன்னர்.

‘இந்த நிலையிலும் பார்ப்பதற்கு நீங்கள் அழகாகவே இருக்கிறீர்கள்” என்று சொல்லிக்கொண்டே மெது மெதுவாய்ச் செடியைப் பிடுங்குவது போல அவரைத் தூக்கிவிட்டான்.

பிறகு அவரது உடம்பையெல்லாம் சுத்தம் செய்து வாசனைத் திரவியங்ளைப் பூசி, பட்டு ரோஜாக்களையும் கொத்தாகப் பறித்துக் கொடுத்து அனுப்பி வைத்தான் தெனாலிராமன்.

 ‘நீயும் என்னோடு வரவேண்டும்” என்று அப்பொழுதே தெனாலிராமனையும் தன்னோடு அரண்மனைக்கு கூட்டிக் கொண்டு சென்றுவிட்டார் மன்னர்.Post Navi 
Share This

0 Comments: