Saturday, January 4, 2020

தெனாலிராமன் வீரம் விளைந்தது


அது உல்லாசமான மாலை வேளை. அரண்மனையின் நிலா மண்டபத்தில் எங்கும் தண்ணீரும் பன்னீருமகாத் தெளித்து குளுகுளுவென்று வைத்திருந்தனர்.

அழகான சுகாசனங்களும்  ஆங்காங்கு போடப்பட்டிருந்தன;அரசனுடன் பல சேனைத் தலைவர்களும் சில நகரப் பிரபுக்களும் அமர்ந்து உல்லாசமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

பேச்சு யுத்த களத்தின் மீது திரும்பியது.உடனே சேனைத் தலைவர்கள் அவரவர் யுத்த களத்தில் தங்கள் நடத்திய வீரதீர பராக்கிரமச் செயல்களைச் சொல்லி தற்பெருமையடித்துக் கொண்டனர்.“ஒரு தடவை என்ன ஆயிற்று தெரியுமோ! நான் சில ஆட்களை வைத்துக் கொண்டே, எதிரியின் பெரிய சேனையை எதிர்த்திருக்கிறேன்.”

“என்ன ஆயிற்று? முடிவைச் சொல்லுங்கள்.”

“வெற்றி சூடினேன். அவர்களனைவரையும் அப்டியே துவம்சம் செய்து ஜெய்த்திருக்கிறேன்” என்றார் ஒருவர்.

“ப்பூ!இது என்ன பிரமாதம்! நீங்களேனும் சில ஆட்களை வைத்துக் கொண்டு எதிர்த்தீர்கள்! என் நிலை எப்படி தெரியுமா?”

“சொல்லுங்கள். சொன்னால்தானே தெரியும்!”நான் தன்னந்தனியாய் இருந்துகொண்டே எதிரியின் சிறு படையை எத்திர்த்து துவம்சம் பண்ணியிருக்கிறேன்.கடைசியில் வெற்றி என் பக்கம்”

“கடைசியில் எப்படி ஏற்பட்டது அது?”

“என் கையிலிருந்த கோலைச் சுழற்றி, அவர்கள் அனைவரையும்  அப்படியே சிதற அடித்தேன்!”

“இது என்ன பிரமாதம்! ஒரு தடவை பாருங்கள்! நான் எதிரியின் யானைப் படைக்குள்ளேயே புகுந்து விட்டேன்.”

“அப்பட்யே நசுங்கிப் போயிருப்பீர்கள்!”

சே! சே! அது நடக்குமா நம்மிடம்!”“சரி என்னதான் செய்தீகள்?”

“வளைந்து வளைந்து புகுந்து சென்று, பட்டத்து யானையிடம் சென்றுவிட்டேன்.”

“அது அப்படியே துதிக்கையல் தூக்கியெறிந்திருக்குமே!”

“அது நடக்குமா நம்மிடம்! நான் அந்த யானைக்கே வெடி வைத்து விட்டு வந்து விட்டேன் தெரியுமா!” என்று தன்னைப் பீத்திக் கொண்டார் இன்னொருவர்!“வெற்றி சூடினேன். அவர்களையும் அப்படியே துவம்சம் செய்து ஜெய்த்திருகிறேன்” என்றார் ஒருவர்.

அந்த சமயம் பார்த்து தெனாலிராமன் அங்கு வந்து சேந்தான்.

அவர்களுடைய ஜம்பப் பேச்சு அவனுக்குக் கொஞ்சமேனும் பிடிக்கவில்லை.அவர்களது வாயை எப்படியேனும் அடக்க வேண்டுமே என்று திட்டமிட்டான்.

உடனே “போங்க  நீங்கள் செய்ததெல்லாம் என்ன பிரமாதம் என்று ஆரம்பித்தான். எல்லாரும் திரும்பினார்கள்.“என்ன சொல்றே! நீ குட யுத்தக்களத்தின் நடுவிலேயே இறங்கியிருக்கிறேன் தெரியுமா!”

“ஏதோ சேனைக்கு சமையற்காரனாக போயிருப்பாய்” என்று  ஏளனமாக சொன்னார் அரசர்.

“இருக்கும்! இருக்கும்! அப்படித்தானிருக்கும்” என்று சொல்லி அங்கிருந்த அனைவரும் கொல்லென்று சிரித்தார்கள்.

“உஸ் நிறுத்துங்கள் உங்கள் சிரிப்பை!” என்று சீற்றத்துடன் கத்தினான் தெனாலிராமன்.

“அரசே! என்னை நம்புங்கள். நான் யுத்தகளத்திற்குச் சென்று யுத்தமே புரிநந்திகிறேன். என் சமயலைச் சாப்பிட்டு யுத்த வீரர்கள் அதிக நாள் ஜீவித்திருக்க முடியாதல்லவா!அதனால்தான்!” என்றான் தெனாலிராமன்.“அப்படியா அது! அதுவும் நல்ல்லது தான் உன் பிரதாபத்தைச் சொல்லு கேட்போம்” என்றார்கள் அனைவரும்.

“அன்று சரியான யுத்தம் நடந்தது. இரண்டு பக்கமும் சம பலத்தில் இருந்தால், அந்த யுத்தம் வெகு நாட்களாக நடந்து வந்தது. அது எனக்கு பிடிக்கவில்லை.”

“அப்புறம் என்ன செய்தாய்?”

அன்று நான் எதிரியின் முகாமுக்குள் தன்னந்தனியே சென்றேன்”

“அடப் பாவி! உன்னை உயிரோடு அனுப்பியிருக்க மாட்டார்களே!”“அங்கிருந்த அனைவரும் என்னை வேற்று மனிதன் என்று கண்டுபிடித்து விட்டார்கள்”

“தலையையா! அதைத்தான் எனக்கு முன்னாடியே எவனோ வெட்டிக் கொண்டு போயிருந்தானே!”

அப்புறம்?

“என்மேல் பாய வந்தார்கள். அந்த பாச்சா என்னிடம் நடக்கவில்லை.

“என்னதான் செய்தாய்?”“அவர்களுக்குப் போக்குக் காட்டி, எதிரி சேனைத்தலைவனின் காலை வெட்டிக் கொண்டு ஒடிவந்து விட்டேன்.”

“என்ன! என்ன! காலை வெட்டி வந்தாயா? போனதுதான் போனாயே, அவன் தலையை வெட்டி கொண்டு வருவதற்கென்ன!” என்றார் அரசர்.

“தலையையா! அதைத்தான் எனக்கு முன்னாடியே எவனோ வெட்டிக் கொண்டு போயிருந்தானே!” என்று கையை விரித்தான் தெனாலிராமன்.

“ஓ! அப்படியா அது?” என்று அரசர் உட்பட அனைவரும் விழுநந்து விழுந்து சிரித்தார்கள்.

தெனாலிராமனும் அவர்களோடு சேர்ந்து கொண்டு வயிறு குலுங்கச் சிரித்து மகிழ்ந்தான்Post Navi 
Share This

0 Comments: