Thursday, May 14, 2020

தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு 500 கீழ் குறைந்த கொரோனா..!!!


தமிழகத்தில் இன்று புதிதாக 447 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்களில் முதல் முறையாக இன்று கொரோனா பாதிப்பு 500க்குக் கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பு 5,625 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 2 பேர் உயிரிழந்ததை அடுத்து, மாநிலத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் சுமார் 10 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முதல் முறையாக 500க்கும் குறைவாக இன்று பதிவாகியுள்ளது.

அதே சமயம், தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து அதிகபட்சமாக இன்று 64 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் மொத்தம் 2,240 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 


Post Navi 
Share This

0 Comments: