Thursday, May 7, 2020

காலத்தின் கையில் ஐபிஎல் 2020 போட்டிகள்...!!

இந்த ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏனென்றால் இந்த ஆண்டு நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

காலம் கடந்து சென்றுவிட்டது இனிமேலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்று ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம் பிசிசிஐ ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று கூறிக் கொண்டிருக்கின்றது. ஐபிஎல் போட்டி என்பது இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்த ஒரு கிரிக்கெட் தொடர் ஆகும். 

பிசிசிஐயின் முடிவை நோக்கி உலகம் முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஐபிஎல் போட்டி என்றாலே அரங்கங்கள் அதிரும். ஆனால் தற்போது அது வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த மாதம் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், ஜெய்ப்பூர், மொஹாலி ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த நகரங்கள் எல்லாம் முடங்கி கிடைக்கின்றன. ஐபிஎல் என்பது தொழிலதிபர்கள் தங்கள் பங்குகளுக்கு வீரர்களை ஏலம் எடுப்பர். ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் களத்தில் இறங்கி அணிக்காக விளையாடுவர்.அந்த வீரர்கள் என்ன விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்களோ அந்த விலை அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும்.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களும் கொண்டாடும் ஐபிஎல் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி அனைத்து ரசிகர்கள் மனதிலும் எழத் தொடங்கியுள்ளது. இதற்கு பிசிசிஐ அளிக்கும் பதில் என்னவென்றால் கொரோனா வைரஸின் தீவிரம் குறைந்தால் மட்டுமே சாத்தியம் என்று கூறப்படுகிறது. 

மேலும் இதற்கு இன்னொரு வாய்ப்பு உண்டு. அது என்னவென்றால் இந்த ஆண்டின் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை 20 ஓவர் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன் கொரோனா வைரஸின் பாதிப்பு குறைந்தால் சிறிய அட்டவணையுடன் ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. கொரோனா வைரஸின் பாதிப்பு குறையாத பட்சத்தில் ஐபிஎல் போட்டி தடை செய்யவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

இந்தியாவில் மட்டும் வைரஸ் பாதிப்பு குறைந்து ஐபிஎல் போட்டியை நடத்திவிட முடியாது ஏனென்றால் உலகம் முழுவதும் உள்ள அனைத்து வீரர்களும் கலந்து கொள்ளும் போட்டியாகும். 

எனவே உலகம் முழுவதும் வைரஸின் பாதிப்பு குறைந்தால் மட்டுமே இதற்கு சாத்தியமாகும். இல்லையென்றால் இந்திய வீரர்களை மட்டுமே கொண்டு ஐபிஎல் போட்டி காண்போரை நெகிழச் செய்யாது. இதுதான் பிசிசிஐயின் முடிவாகவும் கூறப்படுகிறது.

Post Navi 
Share This

0 Comments: