Tuesday, May 5, 2020

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 680 பேருக்கு கரோனா தொற்று



ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸுக்கு புதிதாக 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,63,860 ஐ எட்டியுள்ளது என்று ராபர்ட் கோச் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 139 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 6,831 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,35,000-க்கும் அதிகமானோர் இந்த நோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியில் பவேரியா மாநிலத்தில் 43,162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட ரைன்-வெஸ்ட்பாலியாவில் இதுவரை 33 ஆயிரத்து 728 வழக்குகள் மற்றும் பேடன்-வூர்ட்டம்பேர்க்கில் 32,482 வழக்குகள் பதிவாகியுள்ளன.

தலைநகர் பெர்லினில் தற்போது 6,042 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸைத் தொடர்ந்து கரோனா நோய்த் தொற்றுகளில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது ஜெர்மனி.

Post Navi 
Share This

0 Comments: