Friday, May 8, 2020

அதிக விற்பனை ரெட்மி நோட் 8 சீரிஸ்!


ரெட்மி நோட் 8 சீரிஸ், மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் சீரிஸாக இருந்து வருகிறது. ரெட்மி நோட் 8 சீரிஸின் இரண்டு ஸ்மார்ட்போன்கள் Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro ஆகும்.

சியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின் கூறுகையில், 2019 ஆகஸ்டில் அறிமுகப்படுத்தியதிலிருந்து, இந்த சீரிஸில் மொத்தம் 30 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்களை உலகளவில் விற்பனை செய்துள்ளது.

இந்தத் சீரிஸை அறிமுகமான ஒரு மாதத்திற்குள், சியோமி 1 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் விற்றது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவை மனு குமார் ஜெயின் புதன்கிழமை ட்விட்டரில் அறிவித்தார்.

ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஆகியவை இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளன. அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் இந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான ரெட்மி நோட் 8 சீரிஸ் போன்களை விற்க முடிந்தது என்று சியோமி கூறியிருந்தது.

ரெட்மி நோட் 8, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 செயலி, 6 ஜிபி ரேம் மற்றும் நான்கு பின்புற கேமராக்களுடன் வருகிறது. ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இன்று ரூ.10,999-க்கு கிடைக்கிறது.

ரெட்மி நோட் 8 ப்ரோ, மீடியா டெக் ஹீலியோ ஜி 90 டி செயலி மற்றும் 8 ஜிபி ரேம் வரை வருகிறது. இந்த போனில் நான்கு பின்புற கேமராக்கள் உள்ளன. போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.16,999 ஆகும்.


Post Navi 
Share This

0 Comments: