Friday, May 8, 2020

சரக்குக்கு உயர்த்தியாச்சு... பேருந்து கட்டணத்தை உயர்த்தலாமே...! தமிழக அரசு ஆலோசனை…!!


கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழக போக்குவரத்து கழகம் செயல்படாமல் இருப்பதன் காரணமாக ஊரடங்கு காலத்தில் ரூபாய் 1000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு முடிந்தபின் நஷ்டத்தை சரிசெய்ய போக்குவரத்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசிடம் ஆலோசித்து வருவதாகவும், கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போக்குவரத்து துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் ஊராடங்கிற்கு பின் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், 50 சதவிகித பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், நஷ்டத்தை சரி செய்யவும், வருமானத்தை பெருக்கவும் கட்டாயம் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Navi 
Share This

0 Comments: