Monday, May 4, 2020

எனக்கு கொடுக்கப்பட்ட இடைஞ்சல்களுக்கு கணக்கே இல்லை.. நேரலையில் கமல் வேதனை..!



நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கம் மூலமாக நேரலையாக பங்கேற்று பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடினர். அதில் கமல்ஹாசனின் அரசியல் குறித்த கேள்வி ஒன்றை நடிகர் விஜய் சேதுபதி எழுப்பினார்.
அதில், அரசியலுக்கு வரப்போவதற்கான எந்த அறிகுறியையும் சினிமாவில் காட்டவில்லையே.. ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், அது குறித்து சொல்லாமல் இருப்பதுவே நல்லது. அதை தடுக்க நிறையப் பேர் இருப்பார்கள். அது எனக்கு 2001ல் புரிந்துவிட்டது. நான் அரசியலுக்கு வந்துவிடுவோனோ என்ற சந்தேகத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட இடைஞ்சல்களுக்கு கணக்கே இல்லை. அதை சொல்லிக்காட்ட விரும்பவில்லை.
விருமாண்டி பிரச்சினை எல்லாம் திடீரென்று கிளப்பிவிடப்பட்டது. நிதானமாகக் கோபப்பட வேண்டும் என்று புரிந்துகொண்ட நேரம் எனத் தெரிவித்தார்.
மீண்டும் கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி அரசியலுக்கு வருவதை இவ்வளவு காலம் தள்ளிப்போட்டது ஏன் என கேட்டார். அதற்கு பதில் அளித்த கமல், அதற்கான சூழலே. சரியான வயது வர வேண்டும்.
என்ன இவன் வந்துட்டானா என்று யாரும் சொல்லக்கூடாது. இவர் என்று சொல்கிற வயது வரவேண்டும். அதற்காகக் காத்திருந்தேன். ஒருமையில் பேசுவது ரொம்ப சுலபம் அல்லவா எனத் தெரிவித்தார்.

Post Navi 
Share This

0 Comments: