Sunday, May 31, 2020

கொரோனா நோயாளியிடம் காதல்..!! கொரோனாவையும், காதலையும் வெற்றி கொண்ட பெண் மருத்துவர்..!!

எகிப்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆயிஷா மொசபா என்ற பெண் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அந்த மருத்துவமனையில் முகமது பாமி என்பவர் கொரோனா நோய் தொற்றால் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அப்போது மருத்துவர் ஆயிஷா தான் அவருக்கு சிகிச்சை பார்த்துள்ளார். இதற்கிடையே அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. 2 மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று குணமடைந்த முகமது பாமி மோதிரம் அணிவித்து ஆயிஷாவிடம் காதலை வெளிப்படுத்தினார். ஆயிஷாவும் காதலை  ஏற்றுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Post Navi 
Share This

0 Comments: