Sunday, May 3, 2020

உடலை அடக்கம் செய்ய முடியாமல் திணறும் அமெரிக்கா !! அழுகி போகும் உடல்கள்..



கொரோனா வைரஸ் இன்று உலகையே உலுக்கி கொண்டு இருக்கிறது. தற்போது கொரோனாவின் கிடுக்குப்பிடியில் அமெரிக்கா தான் சிக்கிக்கொண்டு தவிக்கிறது. பிற இடங்களை விடவும் இங்குதான் உயிரிழப்பும் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
நியூயார்க் நகரில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 23,000 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். ஒட்டு மொத்தமாக அமெரிக்காவில் இதுவரை 11 லட்சத்து 60 ஆயிரத்து 838  பேர் பாதிக்கப்பட்டு, 67 ஆயிரத்து 448 பேர் இறந்துள்ளனர்.
தினம் தினம் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் கொரோனா வைரசால் பலியானவர்களை அடக்கம் செய்யும் இடத்தில் 4 பெரிய டிரக்குகளில் அழுகிய நிலையில், மனித உடல்கள் கிடந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
2 நாட்களாக அந்த டிரக்குகள் அங்கேயே நின்றிருந்த நிலையில், அதில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதைபற்றி அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், அந்த டிரக்குகளில் 12க்கும் மேற்பட்ட மனித உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Post Navi 
Share This

0 Comments: