Thursday, May 7, 2020

உலகின் புகழ்பெற்ற மிகப்பெரிய பணக்காரரான பில் கேட்ஸின் அறிவுரைகளை கேளுங்கள்.

பல ஆண்டுகளாக உலக பணக்காரர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளவர் மைக்ரோசாஃப்ட் சாம்ராஜ்யத்தின் முதலாளி பில்கேட்ஸ். வெற்றி பெறுவதற்காக இவர் கூறியுள்ள சில அறிவுரைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

1) நீங்கள் ஏழையாக பிறப்பது உங்கள் தவறல்ல, ஆனால் ஏழையாகவே இறந்துவிட்டால் அது உங்களுடைய தவறு.
2) நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கின்றன.
3) கடினமான வேலைக்கு சோம்பேறியான ஆட்களைத்தான் தேர்வு செய்கிறேன். ஏனென்றால் அவர்களால்தான் அந்த வேலைக்கு
சுலபமான வழிகளை கண்டுபிடிக்க முடியும்.
4) வெற்றி ஒரு மோசமான ஆசிரியர் அது புத்திசாலிகளையும் மயக்கி தோல்வியே நமக்கு இல்லை என்று நினைக்க வைத்துவிடும்.
5) என்னுடைய வகுப்பறையில் இருந்த என்னைவிட அறிவாளிகள் எனக்கு கீழ் பணி புரிகிறார்கள் ஆனால் நான் அவர்களுக்கு முதலாளியாக உள்ளேன்.
6) இந்த உலகில் உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். அப்படி ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களை நீங்களே அவமானப் படுத்திகொள்கிறீர்கள்.
7) பெரிய வெற்றியை அடைய பெரிய அபாயங்களை எதிர்க்க தயாராக இருக்க வேண்டும்.
8) உங்களுக்கு விருப்பமில்லாத வாடிக்கையாளர்களிடம் இருந்துதான் உண்மையில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பல உள்ளன.

நம்முடைய பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.ஆனால் நம்முடைய இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கு சான்றுதான் இந்த மனிதர்.

Post Navi 
Share This

0 Comments: