Wednesday, May 13, 2020

பேருந்து இயக்க முடிவு ? - மாவட்ட ஆட்சியர்களுடன் முக்கிய ஆலோசனை..


தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 8 ஆயிரத்து 718 பேர் பாதிப்படைந்து உள்ளனர். தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கானது வரும் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் அதற்கு முன்பே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியே அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதில், தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு முடிவடையும் மே 17-ம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வு ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

குறிப்பாக பேருந்து சேவையை தொடங்கலாமா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் பழனிசாமி கருத்து கேட்கலாம் எனவும் அதன் அடிப்படையில் முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 


Post Navi 
Share This

0 Comments: