Monday, May 11, 2020

எனக்கு ஒரு ரூபாய் சம்பளம் போதும்.. - நடிகை ஆர்த்தி..


திரைத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பாதிப்பை ஈடுகட்ட நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அதன்படி நடிகர் விஜய் ஆண்டனி தனது புதிய படங்களுக்கான சம்பளத்தில் ரூ.3 கோடியை குறைப்பதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து இளம் கதாநாயகன் ஹரிஷ் கல்யான், உதயாவும் சம்பளத்தை குறைத்துள்ளார். இதுபோல் பிரபல டைரக்டர் ஹரியும் சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைப்பதாக அறிவித்து உள்ளார்.

இந்நிலையில், ஒரு ரூபாய் மட்டும் சம்பளமாக பெற்று நடிக்கிறேன் என நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது, கடினமான இந்தக் கொரோனா காலத்தை அனைவரும் கடந்து வந்துகொண்டே இருக்கிறோம்.

ஒரே ஒரு சின்ன வேண்டுகோள் உள்ளது. நான் நடிக்கும் படங்களில் இயக்குநர் ஒரு காட்சியைத் திட்டமிடலாம். அந்தக் காட்சிக்கு 10 துணை நடிகர்கள் அல்லது நாடக நடிகர்கள் தேவைப்படும் பட்சத்தில், அதில் கூடுதலாக 10 நடிகர்களுக்கு அந்த வேலையைக் கொடுக்க வேண்டும். ஆர்த்தி நடித்தால் இவ்வளவு சம்பளம் என்று ஒரு பட்ஜெட் வைத்திருப்பீர்கள். நான் வாங்கப்போவது ஒரு ரூபாய் தானே. அந்த மீதிப் பணத்தில் மற்றவர்களுக்கு சம்பளம் கொடுத்தீர்கள் என்றால் ரொம்பவே சந்தோஷம்.

ஏனென்றால், நமது கலைஞர்கள் அரிசி, பருப்பு கிடைக்குது, சாப்பிட்டுவிட்டு வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைப்பவர்களே கிடையாது. அவர்கள் தினமும் உழைத்துச் சம்பாதித்துக் கிடைக்கும் பணத்தில் வயிற்றுப் பசியை ஆற்றிக் கொள்வார்கள். தன்மானத்துடன் வாழ்வார்கள். என்று அவர் கூறி உள்ளார்.


Post Navi 
Share This

0 Comments: