Sunday, May 10, 2020

நடிகர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்த..! - ராகவா லாரன்ஸ்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். குட்டி ஸ்டோரி தொடங்கி வாத்தி கமிங் வரை இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். நெட்டிசன்களும் அந்த பாடங்களை கொண்டாடி வருவது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் சமீபத்தில் இரண்டு கைகளையும் இழந்த மாற்று திறனாளி ஒருவர் வாத்தி கமிங் பாடலை வாசித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலானது. அதை ட்விட்டரில் பகிர்ந்து இருந்த அனிருத், அவரது திறமையை பாராட்டி இருந்தார்.


A post shared by Devi Media (@acmaa_dharun) on

இந்நிலையில் இது பற்றி விஜய்க்கு கோரிக்கை ஒன்றை வைத்து உள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். "நண்பன் விஜய் மற்றும் அனிருத்துக்கு வேண்டுகோள்"என இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

"இவர் தன்சென். என்னுடைய மாற்று திறனாளிகள் குரூப்பில் இருப்பவர். அவரது என்னுடைய காஞ்சனா படத்தில் நடித்துள்ளார். அவர் லாக்டவுன் நேரத்தில் மூன்று நாட்கள் பயிற்சி செய்து வாத்தி கமிங் பாடலை வாசித்துள்ளார். அவரது ஆசை அனிருத் சார் இசையில் ஒரு சிறிய பகுதியாவது வாசிக்கவேண்டும் என்பது தான். அதை விஜய் முன்னிலையில் வாசிக்க வேண்டும். அவரது கனவு நிஜமாகும் என நம்புகிறேன்" என லாரன்ஸ் கூறியுள்ளார்.

ராகவா லாரன்ஸின் கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


Post Navi 
Share This

0 Comments: