Thursday, May 7, 2020

"சீனவில் மீண்டும் கொரோனா பரவ வாய்ப்பு..?"- அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை!

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸால் சீனாவில் 82,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவை விட அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தான் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளன. சீன அரசு விதித்த கடும் கட்டுப்பாடுகள் மற்றும் துரித நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. கொரோனாவின் கட்டுப்பாட்டில் இருந்த சீனா படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.

அந்நாட்டின் முயற்சியை உலக சுகாதார நிறுவனமும், சர்வதேச நாடுகளும் பாராட்டின. இருப்பினும் சீனாவில் கொரோனா பாதிப்பு முழுமையாக குறையவில்லை. அவ்வப்போது ஒரு சிலருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து விட்டது என்ற மனநிறைவால் மக்கள் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் எச்சரித்துள்ளார். சீனாவின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது, நாம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் வெற்றியை காட்டுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற நாடுகளில் கொரோனா பாதிப்பின் தீவிரம் இன்னும் குறையவில்லை என்றும், அதனால் கொரோனா பரவல் முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என கூறுவது கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கோவிட்-19 நோயின் சவால்களை எதிர்கொள்ள மக்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். வூஹானில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Post Navi 
Share This

0 Comments: