Monday, May 11, 2020

அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை..!!


பொது முடக்கம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கரோனா எதிரொலியாக, நாடு முழுவதும் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்ட்ட பொது முடக்கம் வருகிற 17ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மாநிலங்களில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு/விலக்கு குறித்தும், அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துத்துவது குறித்தும் அவர் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்டுள்ளார். முதல்வருடன், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மேற்கொள்ளும் 5வது ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். முன்னதாக, இந்த ஆலோசனக் கூட்டத்திற்குப் பிறகே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.


Post Navi 
Share This

0 Comments: