Saturday, May 9, 2020

வெளிநாட்டிலும் வாத்தி கமிங்... விஜய் பாட்டுக்கு மாஸ்....

கத்தி படத்திற்கு பிறகு விஜய்-அனிருத் கூட்டணி சேர்ந்துள்ள படம் மாஸ்டர். கத்தி படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் என்பதால் மாஸ்டர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதை பூர்த்தி செய்யும் விதத்தில் அனிருத் இசையமைத்துள்ள மாஸ்டர் பட பாடல்கள் எல்லாம் இணையத்தில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளன.

வாத்தி கமிங் பாடல் வீடியோவில் அனிருத் நடனம் ஆடி இருந்தார். அதுவும் இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆனது. டிக்டாக்கில் பல லட்சம் வீடியோக்கள் வாத்தி கமிங் நடனத்துடன் ரசிகர்கள் பதிவிட்டிருக்கிறார்கள். சில வாரங்கள் முன்பு பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி வாத்தி கமிங் பாடலுக்கு நடனம் ஆடி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டிருந்தார். அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


A post shared by Devi Media (@acmaa_dharun) on

இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் வாத்தி கமிங் பாடலுக்கு பொது இடத்தில் சிலர் நடனம் ஆடும் வீடியோஇணையத்தில் வைரலாகி உள்ளது.

சோனி மியூசிக் நிறுவனம் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.

Post Navi 
Share This

0 Comments: