Thursday, May 14, 2020

கொரோனா சோதனை கருவியின் தவறான முடிவுகள் - வெள்ளை மாளிகை அதிகாரிகள் கவலை..!!


வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் கொரோனா கிருமித்தொற்றை உடனடியாகப் பரிசோதிக்கப் பயன்படும் கருவிகளில் 50 விழுகாட்டு முடிவுகள் தவறாக இருப்பதாய் NYU Langone Health ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். Abbott Laboratories நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பரிசோதனைக் கருவிகள், கிருமித்தொற்று இருப்பதை ஐந்தே நிமிடங்களில் அடையாளம் காண்பதாகவும் கிருமித்தொற்று இல்லை என்பதை 13 நிமிடங்களில் காட்டுவதாகவும் கூறப்பட்டது. மூக்கிலிருந்து எடுக்கப்படும் மாதிரிகள் நேரடியாகச் சோதனையிடப்படும்போது, 48 விழுக்காட்டு முடிவுகள் கிருமித்தொற்று இல்லை என்று தவறுதலாகக் காட்டியதை ஆய்வு கூறியது.

ஆய்வின் முடிவுகளை மறுத்துள்ள Abbott Laboratories, மாதிரிகள் சரியாக எடுக்கப்படவில்லை என்று குறைகூறியது. சுமார் 1.8 மில்லியன் ID NOW என்றழைக்கப்படும் கருவிகள் விநியோகிக்கப்பட்டதாகவும், அவற்றில் 0.02 விழுக்காடு மட்டுமே தவறான முடிவுகளைக் கொடுப்பதாகவும் நிறுவனம் கூறியது. டெட்ரோயிட் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட மற்றோர் ஆய்வில் 98 விழுக்காட்டு முடிவுகள் சரியாக அடையாளம் காணப்பட்டதை நிறுவனம் சுட்டியது. மார்ச் மாதத்தின் இறுதியில் அதிபர் டிரம்ப் பரிசோதனைக் கருவிகளுக்கு ஒப்புதல் வழங்கி அவற்றை வெள்ளை மாளிகையில் அறிமுகப்படுத்தினார்.


Post Navi 
Share This

0 Comments: