Tuesday, May 5, 2020

சென்னையில் டாஸ்மாக் திறக்க அனுமதி இல்லை...தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் எல்லை வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதியில்லை எனவும் அறிவித்துள்ளது. மேலும் 7-ம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைககள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை வண்டலூர் இரணியம்மன்மேடு வரை சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு, ஓ.எம்.ஆர். சாலையில் தாழம்பூர் வரை மாநகர காவல் எல்லை உள்ளது. சென்னை அடுத்த குன்றத்தூர், மாங்காடு, நசரத்பேட்டிட வரை சென்னை மாநகர காவல் பகுதியாகும். திருநின்றவூர், செங்குன்றம், மணலி, எண்ணூர், வரையிலும் சென்னை காவல் எல்லைக்குள் அடங்கும்.

மேலும் சென்னை நுழைவு வாயிலான தாம்பரம், ஆவடி, பூந்தடல்லி, அக்கரை சோதனை சாவடி, சோழிங்கநல்லூர் உட்பட்ட பகுதிகளிலும் மற்றும் நகர் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Navi 
Share This

0 Comments: