Sunday, May 10, 2020

விஜய் சேதுபதியின் மீதான எதிர்ப்பு தமிழகம் முழுவதும் வலுக்கிறது..!!


நடிகர் விஜய் சேதுபதி இந்து கடவுள் குறித்து பேசி, தனது சினிமா வாழ்க்கையை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். நடிகர்கள் தங்கள் சுய விளம்பரத்திற்காகவும், மாற்று மதத்தை சேர்ந்த நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சினிமா துறையை பயன்படுத்தி கொண்டு இந்து மதத்திற்கு எதிராக இந்துக்கள் மனம் புன்படும்படி பேசி வருகின்றனர். பணத்துக்கு ஆசைப்பட்டு, தகாத கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி, தங்கள் சினிமா வாழ்க்கையை பல நடிகர்கள் இழந்துள்ளனர்.

கடந்த காலங்களில் அவ்வப்போது இந்து இறை நம்பிக்கையை கொச்சைப்படுத்தி பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத இந்துக்கள், தற்போது யார் தங்கள் மதத்திற்கு எதிராக பேசினாலும் வெகுண்டு எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு எழுச்சி அடைந்துள்ளனர்.

அந்த வரிசையில் நடிகர் ஜோசப் விஜய், நடிகர் சிவகுமார், நடிகை ஜோதிகா, இயக்குனர் சமுத்திரக்கனி, நடிகர் சூர்யா, நடிகர் விஜய்சேதுபதி, நடிகர் சீமான், நடிகர் கமல். ஆகியோர் மக்கள் மத்தியில் உள்ள தங்கள் நன்மதிப்பை இந்து மத எதிர்ப்பு பிரச்சாரத்தின் மூலம் தங்களாவே மக்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து கோவில் சாமி சிலைக்கு நடைபெறும் அபிஷேகம் குறித்து இந்துக்கள் மனம் புன்படும்படி பேசிய பேச்சு, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்து அமைப்புகள் ஓன்று கூடி நடிகர் விஜய் சேதுபதிக்கு பாடம் கற்பித்தே ஆக வேண்டும் என முடிவெடுத்து, தமிழகம் முழுவதும் அவர் மீது காவல் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர்.

இந்து மகா சபையினர் திருச்சி காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்து முன்னணியினர் திருநெல்வேலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இந்து அமைப்பை சேர்ந்த பலர் தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்து வருகின்றனர். காவல்துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றம் சென்று நடிகர் விஜய் சேதுபதி மீது அவருக்கு தக்க பாடம் புகட்ட முடிவெடுத்துள்ளது இந்து அமைப்புகள்.

நடிகர் விஜய் சேதுபதியை நீதிமன்றத்திற்கும், வீட்டிற்கு அலைய விடுவதன் மூலம் அவரால் சினிமா படப்பிடிப்புக்கு செல்ல முடியாமல் போகும். இதனால் விஜய் சேதுபதியை சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுவார்கள். இது மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும், எனவே நடிகர் விஜய் சேதுபதியை சினிமாவில் இருந்து விரட்டாமல் ஓயமாட்டோம் என இந்து அமைப்பினர் சபதம் எடுத்துள்ளனர்.

இருந்தாலும் எவ்வளவோ கஷடங்களுக்கு மத்தியில் முன்னுக்கு வந்த நடிகர் இப்படி திடீரென சிக்கலில் சிக்கிக்கொள்வது அனைவருக்கும் கவலையே அளிக்கும்.


Post Navi 
Share This

0 Comments: