Saturday, June 13, 2020

தமிழகத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்தை தொட்டது கொரோனா..???


தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 2 ஆயிரத்தை தொட்டுள்ளது கொரோனா தொற்று. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 1,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ தொற்றால் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரு நாளில் 17,911 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 691817 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனாவால் 1,989 பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 42687 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவில் இருந்து இன்று 1362 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை 23409 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளார்கள். தற்போதைய நிலையில் தமிழகத்தில் 18,878 பேர் கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Post Navi 
Share This

0 Comments: