Wednesday, June 17, 2020

தமிழகத்தில் முதன் முறையாக 2000 கடந்த கொரோனா..!!


தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக 2000 கடந்துள்ளது. இதனையடுத்து, மொத்தம் பாதிப்ப எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக பாதிப்பு 2000 கடந்துள்ளது. இன்றும் மட்டும் 2,174 பேர் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,193ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த 14 நாட்களாக பாதிப்பு ஆயிரத்தை எட்டி வந்த நிலையில் நேற்று மட்டும் ஆயிரத்திற்கும் கீழ் சென்றது.

இந்நிலையில், மீண்டும் சென்னையில் கொரோனா பாதிப்பு 1,276ஆக பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 35,521ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 842 அடுத்து மொத்தம் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 27,624ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில், தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 49 உயிரிழந்ததையடுத்து மொத்தம் பலி எண்ணிக்கை 576ஆக உயர்ந்துள்ளது. இன்றைய உயிரிழப்புகளில் 35 பேர் அரசு மருத்துவமனையிலும், 14 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும் உயிரிழப்பும் அதிகரித்து வருவது பொதுமக்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post Navi 
Share This

0 Comments: