Monday, June 22, 2020

தமிழகத்தில் தொடர்ந்து இன்றும் 2000 கடந்தது கொரோனா தொற்று..!!


தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த 17ஆம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியே பதிவாகி வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 2,710 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உச்சமாக 2,710 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.


Post Navi 
Share This

0 Comments: