Saturday, June 20, 2020

தமிழகத்தில் இன்றைய கொரோனா தொற்று 2396 பேர்..!! சென்னையில் மட்டும் 39,641 பாதிப்பு..??

சென்னையில் இன்று (ஜூன் 19) 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 39,641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 2,396 பேரில் சென்னையில் மட்டும் 1,254 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 39,641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 180 பேருக்கும், திருவள்ளூரில் 131 பேருக்கும், திருவண்ணாமலையில் 125 பேருக்கும், மதுரையில் 90 பேருக்கும், காஞ்சிபுரம் 87 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

Post Navi 
Share This

0 Comments: