Sunday, June 21, 2020

கொரோனா-வின் கோர தாண்டவம் ஒரே நாளில் 2532 பேருக்கு பாதிப்பு: சுகாதாரத்துறை

தமிழகத்தில் மேலும் 2532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 59,377-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 15,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,10,461-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Post Navi 
Share This

0 Comments: