Monday, June 29, 2020

தமிழகத்தில் புதிதாக 3,949 பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை..!!


தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 3,949 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றிய இன்றைய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,949 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 2,167 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 62 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1,141 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 47,749 பேர் குணமடைந்துள்ளனர்.


Post Navi 
Share This

0 Comments: