Friday, June 26, 2020

காவல்துறை மக்களை துன்புறுத்துவது என்பது மற்றொரு நோய்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை- மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென உயிரிழந்தோரின் குடும்பத்தினர், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

உரிய நீதி வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது

இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கை மற்றும் மாவட்ட எஸ்பி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி தூத்துக்குடி எஸ்.பி. இன்று நிலையை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை, அவர்கள் மீதான குற்றச்சாட்டு விவரம், விசாரணை மற்றும் எந்த சூழ்நிலையில் அவர்கள் இறந்தார்கள்? என்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றன.

விசாரணைக்கு பிறகு நீதிபதிகள்,"காவல்துறையினாரல் தாக்கப்படுவது கொரோனா போல மற்றொரு நோய் என தந்தை மகன் இறந்த வழக்கில், உரிய நீதி வழங்கப்படும், நீதிமன்றத்தை குறைவாக மதிப்பிடவேண்டாம். கூடுதல் மன அழுத்தத்தில் காணப்படும் போலீசாருக்கு கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்துறை செயலர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு போலீசுக்கான வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்படும்.
தந்தை மகன் இறந்தது குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றது" என்று கருத்து தெரிவித்தனர். மேலும் கோவில்பட்டி கிளைச்சிறையின் பதிவேடுகள், மருத்துவ பதிவேடுகளை புகைப்படம்,அனைத்து சிசிவிடி பதிவுகளையும் சேககரித்து பாதுகாப்பாக வைக்க கோவில்பட்டி நீதித்துறை நடுவருக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கானது ஜூன் 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளது.


Post Navi 
Share This

0 Comments: