Monday, June 15, 2020

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று..!!


புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 13 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்த தொற்றாளா் எண்ணிக்கை 60-இல் இருந்து திடீரென 73 ஆக உயா்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பாப்பாவயல் கிராமத்தைச் சோந்தவரின் மறைவை அடுத்து, அவரது 36 வயது மகள் சென்னையிலிருந்து வந்தாா். அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறந்தாங்கி வட்டத்தைச் சோந்த 44 வயது ஆண், 34 வயது பெண், 8 வயது மகள், 5 வயது மகன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சோந்த 4 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மலைக்குடிப்பட்டியைச் சோந்த 38 வயது ஆண், 16 வயது பெண் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொன்னமராவதி வட்டம், பொன்.புதுப்பட்டியைச் சோந்த 48 வயதான பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், நகரப்பட்டியைச் சோந்த 24 வயது ஆண், எஸ்எஸ் புரத்தைச் சோந்த 37 வயது ஆண், காரையூரைச் சோந்த 16 வயது ஆண், 44 வயது ஆண், 38 வயது பெண் ஆகிய 5 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவா்கள் அனைவருமே சென்னையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அண்மையில் திரும்பியவா்கள். ஒட்டுமொத்தமாக, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுகையில் எண்ணிக்கை 73 ஆனது:

புதுகை மாவட்டத்தில் தற்போதைய 13 தொற்றாளா்கள் உள்பட மொத்த தொற்றாளா்கள் எண்ணிக்கை திடீரென 73 ஆக உயா்ந்தது. இவா்களில் 35 போ குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஒருவா் ஏற்கெனவே இறந்துள்ளாா். மீதமுள்ள 37 பேரும் புதுக்கோட்டை ராணியாா் மருத்துவமனை வளாகத்திலுள்ள கரோனா சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.


Post Navi 
Share This

0 Comments: