Friday, June 26, 2020

சசிகலா விடுதலையா..?? சிறைத்துறை விளக்கம்



சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது சசிகலா 4 ஆண்டுகள் தண்டனையை முழுமையாக அனுபவிக்கும் முன் நன்னடத்தை அடிப்படையில் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர் வெளிவரும் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

இந்நிலையில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் நரசிம்ம மூர்த்தி என்பவர் கர்நாடக சிறைத்துறையில் சசிகலா எப்போது விடுதலை ஆவார் என கேட்டறிந்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள சிறைத்துறை சசிகலாவின் தண்டனை காலத்தை கணக்கிடுவது பல்வேறு நடைமுறைகள் உள்ளது.

அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதால் அவருடைய விடுதலை தேதியில் மாற்றம் இருக்கலாம் என கூறியுள்ளனர்.

இதனையடுத்து செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு மேல் சசிகலா விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது. டெல்லி பாஜக தலைமை மூலம் சசிகலாவிடம் அரசியல் விஷயங்கள் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் 14 ஆம் தேதியில் சசிகலா விடுதலை ஆவார் என பாரதிய ஜனதா கட்சியின் ஆசீர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், "கர்நாடக சிறைத்துறை மூத்த அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது, சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக எந்த பரிசீலனையும் இல்லை என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சில மணி நேரம் பரபரப்பானது முடிவுக்கு வந்துள்ளது.


Post Navi 
Share This

0 Comments: