Thursday, June 25, 2020

கோயம்பேடாக மாறுமா..?? மதுரை பரவை சந்தை...!!!

சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா பரவலின் மையப்பகுதியாக மாறியது. இதனால் கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டு, மாறாக திருமழிசையில் காய்கறி சந்தை தற்போது செயல்பட்டு வருகிறது.

இதேபோன்று மதுரை மாவட்டம் பரவையில் உள்ள ஒருங்கிணைந்த காய்கறி சந்தை நாள் ஒன்றுக்கு 15 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் அளவிற்கு பெரிய வியாபார ஸ்தலமாக உள்ளது.

சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் போன்றே மதுரை பரவை மார்க்கெட்டிலும் கொரோனா தாக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் சந்தை மூடப்பட்டு நான்கு வெவ்வேறு இடங்களில் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பரவை காய்கறி சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அதனால் பரவை ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் பணியாற்றியவர்கள் விவரம் பெறப்பட்டு 1009 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 25 பேருக்கு தீவிர தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமை மையத்திற்கு அழைத்து வர சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

பரவை சந்தையில் பணியாற்றியவர்களுடன் அடுத்தடுத்து தொடர்பில் இருந்தவர்கள் என 2000 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


Post Navi 
Share This

0 Comments: