Saturday, June 27, 2020

ஐ.பி.எல் போட்டியை நடத்தகூடாது..?? - பாகிஸ்தான்


கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் (ஐ.பி.எல்.) நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்திய வீரர்கள் மட்டுமல்லாது ஏராளமான வெளிநாட்டு வீரர்களும் தங்களது அதிரடியை காட்டி வருகின்றனர். வெற்றிகரமாக 12 சீசன்கள் முடிவடைந்துள்ள இந்த தொடரின் 13 வது சீசன் கடந்த மார்ச் 29-ந்தேதி தொடங்க இருந்தது.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது இந்த தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலககோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டால், அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடர் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

அதற்கு ஏற்றாராபோல், தற்போதைய சூழ்நிலையில் டி20 உலககோப்பை தொடரை நடத்துவது சாத்தியம் இல்லை என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. ஆனால் ஐசிசி இதுவரை டி20 உலக கோப்பையை தள்ளிவைப்பது குறித்து முடிவு எடுக்காமல் இழுத்தடிக்கிறது. ஐசிசி-யின் தலைவராக இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஷசாங்க் மனோகர்தான் இதற்கு காரணம் என பிசிசிஐ தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அடுத்த மாதம் மத்தியில்தான் முடிவு எடுக்கப்படும் என ஐசிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் மாதம் ஆசிய கோப்பை டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரை நடத்தும் உரிமம் பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்தால் இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டியை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடருக்காக டி20 தொடரை ஒத்திவைக்க சம்மதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஆசிய கோப்பையையும் நடத்தியே தீருவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

முன்னதாகவே ஐபிஎல் தொடருக்கு தயாரானால்தான் வெளிநாட்டு வீரர்களை வரவழைத்து அவர்களை தனிமைப்படுத்தி தொடருக்கு தயார்படுத்த முடியும். இதற்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் தேவைப்படும். இதனால் அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெற இருக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் நேரத்தில் ஆசிய கோப்பையை நடத்த பிசிசிஐ அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. ஆனால் ஆசிய கோப்பைக்காக பாகிஸ்தான் சூப்பர் லீக்கை தியாகம் செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தயாராக இல்லை.

ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இரண்டும் முட்டுக்கட்டையாக இருப்பதால் என்ன செய்யலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. ஒருவேளை ஐபிஎல் தொடர் நடத்தப்படாவிட்டால் பிசிசிஐ-க்கு சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.


Post Navi 
Share This

0 Comments: